Contact Us

To begin customizing your site go to Appearance -> Customizer and select Theme Options. Here's you'll find custom options to help build your site.

Read More

Achievement

To add a slider go to Theme Options -> Homepage and choose page slider. The slider will use the page title, excerpt and featured image for the slides.

Read More

Team

To add featured content go to Theme Options -> Homepage (Featured) and turn the switch on then add the content you want for each section.

Read More

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம்

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்பது இந்திய மாநிலமான தமிழகத்திலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் (Unorganised Workers) சமூக பாதுகாப்புக்காக தமிழக் அரசால் செயல்படுத்தப்படும் நல வாரியங்கள் (Welfare Board) ஆகும். இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, கலைஞர் காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் கீழ்கண்ட நலவாரியங்களை உள்ளடக்கியது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் 30.11.1994 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரிய நலத்திட்டத்தின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொழில் இனங்கள் ஆகிய 53 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 53 வகையான கட்டுமானத் தொழில்கள்.

1.கல் உடைப்பவர்
2.கல் வெட்டுபவர்
3.கல் பொடி செய்பவர்
4.கொத்தனார்
5.செங்கல் அடுக்குபவர்
6.தச்சர்
7.பெயிண்டர் அல்லது வார்னிஷ் பூசுபவர்
8.கம்பி வளைப்பவர் உட்பட பிட்டர்
9.சாலை குழாய் பதிப்பு பணியாளர்
10.எலக்ட்ரிஷியன்
11.மெக்கானிக்
12.கிணறு தோண்டுபவர்
13.வெல்டர்
14.தலைமை கூலியாள்
15.கூலியாள்
16.தெளிப்பவர் மற்றும் கலப்பவர் (சாலை பரப்பும் பணி)
17.மரம் அல்லது கல் அடைப்பவர்
18.கிணற்றில் தூர் எடுப்பவர்
19.சம்மட்டி ஆள்
20.கூரை வேய்பவர்
21.மேஸ்திரி
22.கருமான்
23.கொல்லன்
24.மரம் அறுப்பவர்
25.சந்துகள் அடைத்து நீர் உட்புகாமல் செய்பவர்
26.கான்க்ரீட் மிக்ஸர் அப்ரேட்டர் உட்பட கலப்பவர்
27.பம்ப் ஆபரேட்டர்
28.மிக்ஸர் டிரைவர்
29.ரோலர் டிரைவர்
30.கனரக இயந்திர கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கலாசிஸ் மற்றும் 31.சுரங்க பணியாளர்
32.காவலாளி
33.மொசைக் பாலீஸ் செய்பவர்
34.சுரங்க வழி தோண்டுபவர்
35.பாறை உடைப்பவர் குவாரி வேலையாள்
36.சலவைக்கல் / கடப்பாக்கல் வேலையாள்
37.சாலை பணியாளர்
39.கட்டுமானப் பணி தொடர்பான மண் வேலை செய்பவர்
40.சுண்ணாம்பு பதப்படுத்துவோர்
41.கடல் அரிப்பு தடுப்பு பணியில் ஈடுபடும் வேலையாள்
42.அணைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பாலங்கள், சாலை அல்லது மற்ற கட்டுமானப் பணிகளில் உள்ளபடியாக ஈடுபட்டுள்ள மற்ற வகையான தொழிலாளர்கள்
43.தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வராத செங்கல் சூளை தொழிலாளர்கள்
44.பந்தல் கட்டுமானம்
45.தீயனைப்பு கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல்
46.குளிரூட்டுதல் மற்றும் சூடுபடுத்துதல் கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல்
47.மின்தூக்கி மற்றும் மின்படி பொருத்துதல்
48.பாதுகாப்பு கதவுகள் மற்றும் கருவிகள் பொருத்துதல்
49.இரும்பு மற்றும் உலோக கிராதி ஜன்னல் கதவுகள் புனைத்து கட்டுதல் மற்றும் பொருத்துதல்
50.நீர் எடுக்கும் கட்டமைப்பு தொடர்பான கட்டுமானம்
51.கார்பெட்டிங், பொய்கூரை விளக்கு அமைத்தல், மேற்பூசுதல் தொடர்பான உள்ளலங்காரம்
52.கண்ணாடி வெட்டுதல், இழைத்தல் மற்றும் கண்ணாடி பேனல்கள் பொருத்துதல்
53.சோலார் பேணல் போன்ற மின்மிகை சாதனங்கள் பொருத்துதல்
54.சமையல் கூடம் போன்ற இடங்களில் நவீன அறைகள் அமைத்தல்
55.முள் புனைத்து அமைக்கப்பட்ட கான்கிரீட் பொருட்கள் பொருத்துதல்
56.கோல்ப் மைதானம், நீச்சல் குளம் உட்பட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளை கட்டுதல்
57.கல்பெயர் பலகை, தெரு அறைகலன்கள், பேருந்து நிழற்கூரை, பணிமனைகள் நிறுத்தங்கள்
58.அறிவிப்பு குறி போன்ற கட்டுமானம்
59.ரோட்டரி மற்றும் செயகை நீருற்று போன்ற கட்டுமானம்
பொது பூங்கா நடைபாதை போன்ற கட்டுமானம் மற்றும் இயற்கை நிலைக்காட்சி அமைத்தல்.

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள்


தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 17 நல வாரியங்கள்

1.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்
2.தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்.
3.தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம்,
4.தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம்
5.தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம்.
6.தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம்
7.தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம்
8.தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம்.
9.தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம்.
10.தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்
11.தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்
12.தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்
13.தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம்.
14.தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியம்.
15.தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம்
16.தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம்
17.தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்

30.11.1994 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரிய நலத்திட்டத்தின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொழில் இனங்கள் ஆகிய 53 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்

தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் 17,03,1999 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது, இவ்வாரியங்கள் மூலம் நலத்திட்டங்களில் பட்டியல் இடப்பட்ட தொழில் இனங்கள் ஆகிய 60 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 60 வகையான அமைப்புசாரா தொழில்கள் சுமை ஏற்றுதல், இறக்குதல், அடுக்குதல், சிப்பம் கட்டுதல், தூக்கிச் செல்லுதல், எடைபோடுதல், அளவிடுதல் அல்லது இத்தகைய வேலைகளுக்கான ஆயத்த அல்லது இது தொடர்பான பணி உள்ளிட்ட உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுதல்.
சந்தை அல்லது கடை அல்லது டிப்போ அல்லது தொழிற்சாலை அல்லது சேமிப்புக் கிடங்கு அல்லது கிடங்கு அல்லது இதர நிறுவனம்.
1948-ஆம் வருட துறைமுகத் தொழிலாளர்கள் சட்டத்திற்குட்படாத துறைமுகங்கள், இரயில்வே நிர்வாகத்தால் பணியமர்த்தப்படாத உடலுழைப்புத் தொழிலாளர்கள் பணிபுரியும் இரயில்வே யார்டுகள் மற்றும் குட்ஸ்ஷெட்டுகள்.
1959- ஆம் வருட தமிழ்நாடு வேளாண் விளை பொருள் சந்தைகள் சட்டத்தால் அமைக்கப்பட்ட சந்தைக் குழுக்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட சந்தை.
பொது போக்குவரத்து வாகனங்களில் சுமை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் அது தொடர்பான இதர வேலைகள்.

உப்பளங்களில் வேலை செய்தல்
கள் இறக்கும் தொழில்
படகு பணி
மரத்தொழில்
கயிறு தொழில்
தோல் பதனிடுதல் மற்றும் தோல் உற்பத்தி
தானியங்கி பணிமனையில் (ஆட்டோ மொபைல் ஒர்க்ஷாப்) பணிபுரிதல்)
அப்பளம் தயாரித்தல்
வெளுத்தல் மற்றும் சாயத் தொழில்
மாட்டு வண்டி ஓட்டுதல்
உணவு சமைத்தல்
தேங்காய் உரித்தல்
வனப்பொருட்கள் சேகரித்தல்
உணவு நிறுவனங்களில் பணிபுரிதல்
முந்திரி தொழில்
ஆட்டோ, டாக்சி, வேன், டெம்போ, லாரி மற்றும் பேருந்து ஓட்டுதல் (அரசுத் துறை வாகனங்கள் நீங்கலாக)
எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகித்தல்
சைக்கிள் ரிக்ஷா ஓட்டுதல்
பொறியியல் தொழில்
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்
துணி மடிக்கும் தொழில்
காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரித்தல்
சாக்குத் தொழில்
தங்க, வெள்ளி ஆபரணங்கள் தயாரித்தல்
கைத்தறி மறறும் கைத்தறி பட்டு நெய்தல்
அகர்பத்தி தயாரித்தல்
துணி துவைத்தல் மற்றும் சலவை இடுதல்
பதநீர் இறக்குதல்
பேனா எழுதுமுனை தயாரித்தல்
மாவு ஆலை, எண்ணெய் ஆலை, பருப்பு ஆலை மற்றும் அரிசி ஆலையில் பணிபுரிதல்
அச்சகங்களில் பணிபுரிதல்
விசைத்தறித் தொழில்
தனியார் பாதுகாவல் பணிகள்
பிளாஸ்டிக் தொழில்
மண்பாண்டத் தொழில்
குப்பைகள் சேகரித்தல்
முடித்திருத்துதல் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரிதல்
தெரு வியாபாரம்
ஜவ்வரிசி தொழில்
செயற்கை வைரம் வெட்டுதல்
பட்டுப்புழு வளர்த்தல்
கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிதல்
தையல் தொழில்
மரம் ஏறுதல்
தகர அடைப்பான்கள் தயாரித்தல்
பாத்திரங்கள் தயாரித்தல்
மரவேலைக் கூடங்களில் பணிபுரிதல்
வீட்டுவேலைகளில் பணிபுரிதல்
சைக்கிள் பழுது பார்த்தல்
கல் மற்றும் பிற பொருட்களில் சிற்ப வேலைகள் செய்தல்
களிமண், காகித கூழ் உட்பட பிற பொருட்களில் கைவினைப் பொருட்கள் செய்தல்
சுருட்டு தயாரித்தல்
ஓவியர்கள்
ஒலி மற்றும் ஒளி அமைத்தல்
எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உபகரணங்களை பழுது பார்த்தல் மற்றும் சீர் செய்தல்
வார்த்து வடித்தல்

Ramji Trust
Ramji Trust
× Call us